கன்னி ராசி அன்பர்கள்…!! இன்று பேச்சு செயல்களில் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கும். நண்பரின் வழிகாட்டுதல் உங்களுக்கு நன்மையை கொடுப்பதாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி ஏற்படும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். தயவுசெய்து நேரத்திற்கு உணவை எடுத்துக்கொள்ளுங்கள். வெளியூர் பயணத்தினல் கொஞ்சம் அலைச்சல் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். பிறருடன் பழகும் போது கொஞ்சம் நிதானமாகவே பழகுங்கள்.
தொழில் முன்னேற்றம் காணப்படும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் பிடிக்கும். இன்று கல்வியில் மாணவர்கள் வெற்றி பெறுவதற்கு எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். புதிதாக வீடு மனை வாங்க போட்ட திட்டங்கள் ஓரளவு நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் இருக்கும். இன்று உங்கள் எண்ணங்கள் ஓரளவு ஈடேறும். உங்களின் பொருட்களை மட்டும் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காகத்திற்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்வில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: இளம் நீலம் மற்றும் பச்சை நிறம்