கன்னி ராசி அன்பர்களே..!! இன்று நட்பு வட்டம் விரிவடையும் நாளாக இருக்கும். ஆரோக்கிய தொல்லை அகலும். வாழ்க்கை துணை வழியே மகிழ்ச்சிக்குரிய சம்பவம் ஒன்று நடைபெறும். ஆடை அணிகலன்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டாகும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் தீரும். கொடுக்கல் வாங்கலும் நல்லபடியாக இருக்கும். பழைய பாக்கிகள் வந்துசேரும். போட்டிகள் பொறாமைகள் விலகிச்செல்லும். நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆர்டர்கள் கைக்கு வந்து சேரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் அனைத்துமே கட்டுக்குள் இருக்கும்.
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களின் உழைப்புக்கு ஏற்ற நல்ல பலனும் கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இன்று இருக்கும். கன்னி ராசிக்கு இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். எதையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். இன்று உங்களுக்கு கற்பனை திறன் அதிகமாக இருக்கும்.அதன் மூலம் கலைத் துறை சார்ந்தவர்களுக்கு நல்ல புதிய வாய்ப்புகள் வந்து சேரும். எதையும் துணிச்சலாகவே நீங்கள் செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகளும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் இருக்கும்.
கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் இன்றைக்கு கூடும். எதைப்பற்றியும் கவலைப்படாமல் இன்று முன்னேறி செல்வீர்கள் இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது அதிகமான காரியத்திற்கு செல்லும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செய்யுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக வழங்குங்கள். உங்களுடைய வாழ்க்கையில் அனைத்து விஷயங்களும் சிறப்பாக இருக்கும். கர்ம தோஷங்கள் நீங்கி நீங்களும் மனநிம்மதி ஆகவே காணப்படுவீர்கள்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்