கன்னிராசி அன்பர்களே..!! இன்று புண்ணிய காரியங்களில் உங்களுக்கு ஈடுபாடு அதிகரிக்கும். அசைக்க முடியாத தெய்வ நம்பிக்கையால் நினைத்ததெல்லாம் தடையின்றி நிறைவேறும். பெண்களுக்கு இன்றைய நாள் மிகவும் முக்கியமான நாளாக இருக்கும். பிள்ளைகளிடம் அன்பாகவும் நடந்து கொள்வீர்கள். இன்று எதிர்பாராத நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன் காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனை இருக்கும். இன்று தொலைபேசி வழித் தகவலால் மகிழ்ச்சியான சம்பவங்களை நீங்கள் சந்திக்க கூடும். அதேபோல சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவற்றை இன்று நீங்கள் காதில் கேட்க கூடிய சம்பவங்கள் நடக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும்.
கலகலப்பான சூழல் நிலவும். கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் உங்களுக்கு சிறப்பை கொடுக்கும். அதே போல யாருக்கும் வாக்குறுதிகளை மட்டும் கொடுக்க வேண்டாம். அந்த விஷயத்தில் கவனமாக இருங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது வெள்ளை நிற ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுகிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். விநாயகரை நீங்கள் மனதார வழிபட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்மான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்