கன்னி ராசி அன்பர்களே..!! இன்று விரோதிகள் விலகிச்செல்லும் நாளாக இருக்கும். வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும். வரவு திருப்திகரமாக இருக்கும். மாற்று இனத்தவர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணை புரிவார்கள். பயணங்கள் எதிர்பார்த்த பலனை கொடுக்கும். போட்டிகள் குறையும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவரின் உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன் உங்களுக்கு கிடைக்கும். மேலதிகாரிகள் ஒத்துழைப்பும் இருக்கும். தைரியமாக எந்த காரியத்தையுமே நீங்கள் செய்து முடிப்பீர்கள்.
தேவையான உதவிகள் உங்களுக்கு கிடைக்கப் பெற்று மனம் மகிழ்வீர்கள். அது மட்டும் இல்லை இன்று நீங்கள் துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடும். முடிவுகளை எடுக்கும்பொழுது பெரியோர்களிடம் ஒரு வார்த்தை கேட்டுக்கொள்ளுங்கள். குடும்பத்தாரிடமும் ஒரு வார்த்தை கேட்டுக்கொள்ளுங்கள். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று வெளியூர் பயணத்தின் போது கொஞ்சம் கவனமாக இருங்கள்.
அதாவது பொருட்கள் மீது கொஞ்சம் கவனமாக இருங்கள், அலட்சியம் வேண்டாம். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லை காலையில் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் உங்களுக்கு சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்