கன்னிராசி அன்பர்களே..!! இன்று தொழில் புரிவோருக்கு வீண் செலவுகளும் பணமுடையும் ஏற் படக் கூடியதாக இருக்கும். உணவு உண்ணவும் நேரமின்றி உழைப்பு அதிகமாகும். நேர் வழிகளில் பணம் செலவு செய்தால் மனம் நிம்மதி பெருகும். கூடுமானவரை தேவையில்லாத பொருட்களை தயவுசெய்து வாங்க வேண்டாம். இன்று கோபத்தை குறைத்துக் கொண்டால் அனைத்து விதமான பிரச்சினைகளும் தீரும். சிக்கல்களும் தீரும். இன்று பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. அடுத்தவருடன் சில்லறை சண்டைகள் கொஞ்சம் ஏற்படக்கூடும். உடல் ரீதியில் வயிறு தொடர்பான நோய் கொஞ்சம் ஏற்படலாம்.
சரியான நேரத்திற்கு தயவுசெய்து உணவை எடுத்துக்கொள்ளுங்கள். பணவரவும் இருக்கும். பயணங்கள் ஓரளவு மகிழ்ச்சியை கொடுப்பதாகவே இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். எதிர்பார்த்தபடி பழைய பாக்கிகள் வசூலாகும். கொடுக்கல் வாங்கலில் கூட கொஞ்சம் நல்ல முன்னேற்றம் இருக்கும். மற்றவருடன் இருந்து வந்த பகை நீங்கும். இருந்தாலும் எப்பொழுதுமே கொஞ்சம் கவனமாகவே நீங்கள் செயல்படுங்கள்.
மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கொஞ்சம் கூடுதலாகத்தான் உழைக்க வேண்டியிருக்கும். விளையாட்டுத் துறையில் ஆர்வம் செல்லும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் வாரம் வாரம் வெள்ளிக்கிழமையானால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுப்பதற்கு பழகிக் கொள்ளுங்கள். இது உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தையுமே நீக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்