கன்னிராசி அன்பர்களே..!! சுய திறமையை வளர்த்துக் கொள்ளும் நாளாகவே இன்று இருக்கும். புது விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் கிடைக்கும். இஷ்ட தெய்வ அருளால் தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். பண பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கூடுதல் சொத்து வாங்க திட்டங்களை தீட்டுவீர்கள். இன்று பிள்ளைகளின் வளர்ப்பின் மீது கவனம் இருக்கட்டும். உடல்நிலையில் ஓரளவு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
மருத்துவ செலவுகள் இன்று குறையும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். எந்த ஒரு விஷயத்திலும் கவனம் இருக்கட்டும். வீண் வாக்குவாதம் யாரிடமும் செய்ய வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கொஞ்சம் கூடுதலாக உழையுங்கள்.
ஆசிரியர்களின் சொல்படி நடந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் இன்று அதிஷ்ட நிறமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். காரியம் அனைத்தும் சிறப்பாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்