Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு… “நிலுவைப்பணம் வசூலாகும்”.. நட்பு வட்டம் விரிவடையும்..!!

கன்னிராசி அன்பர்களே..!! இன்று செயல்களில் நேர்த்தியும் திறமையும் மிகுந்திருக்கும். தொழில் வியாபாரம் சிறந்து விளங்கும். நிலுவைப்பணம் வசூலாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதிரி தொல்லை மறையும். இன்று மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிப்படிப்பை படிப்பார்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். நட்பு வட்டம் விரிவடையும். உங்களுடைய எதிரிகள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். உங்களுடைய வசீகரமான பேச்சு வியாபார விருத்திக்கு கைகொடுக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணி தொடர்பாக அலைய நேரிடும். குடும்பத்தில் இருந்த சிறு சிறு பிரச்சினைகள் சரியாகும். கடன் பாக்கிகள் வசூல் ஆகும். அதே போல உங்களுடைய கடன்கள் கட்டுக்குள் இருக்கும். இன்றைய நாள் ஓரளவு சிறப்புமிக்க நாளாகவே இருக்கும். இருந்தாலும் கணவன் மனைவிக்கு இடையே மட்டும் சின்ன சின்ன கருத்து வேற்றுமைகள் வரக்கூடும். கூடுமானவரை அதை மட்டும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று ஏழு நபர்களுக்கு தயிர்  சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |