கன்னி ராசி அன்பர்களே..!! இன்று பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். மகளுக்கு நல்ல வரண் அமையும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள் ஆக இன்றைய நாள் இருக்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவருடன் அனுசரித்துச் செல்வது நல்லது. அவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டியிருக்கும்.
கணவன் மனைவிக்கிடையே திடீர் இடைவெளி ஏற்படலாம். கூடுமானவரை எந்த ஒரு விஷயத்தையும் பேசி தீர்த்துக்கொள்வது நல்லது. இன்று முக்கியமான முடிவுகளை எடுக்கும்பொழுது பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு எடுங்கள். இன்று செலவு கொஞ்சம் இருக்கும். வரவும் இருக்கும். உழைப்பு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல சிறப்பான முன்னேற்றத்தை அடையமுடியும்.
ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு முக்கியப் பணியையும் செய்வீர்கள். அதுமட்டுமில்லாமல் சக மாணவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்துக்கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெளிர் நீல நிறம்