Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு… “தேவையில்லாத வீண் செலவு ஏற்படும்”… உறவினர்களுடன் பகை உண்டாக கூடும்.!!

மற்றவர்களை எளிதாக கவரக்கூடிய கன்னிராசி அன்பர்களே..!! இன்று உங்களுக்கு வாக்கு சாதுர்யத்தால் வளம் காணும் நாளாக இருக்கும். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக நீங்கள் எடுத்த முயற்சி கைகூடும். இன்று பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டை விட்டு வெளியே தங்க நேரிடும். தேவையில்லாத வீண் செலவு ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். தந்தையின் உடல்நலத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். நண்பர்கள் உறவினர்களுடன் பகை உண்டாக கூடும். கவனமாக பேசுவது நல்லது. இன்று உடல்நிலையில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். காய்ச்சல் போன்றவை வரக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள்.

காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் ஓரளவு மன மகிழ்ச்சி ஏற்படும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். கூடுமான வரை பொறுமையாக செயல்படுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்தைச் செய்யும் பொழுது பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை  எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் விநாயகரை மனதார வழிபட்டு இன்று நாளை தொடங்கினால் அனைத்து விஷயங்களும் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்

Categories

Tech |