கன்னிராசி அன்பர்களே..!! இன்று கருத்து வேறுபாடுகள் அகலும் நாளாக இருக்கும். காலை நேரத்திலேயே கலகலப்பான தகவல்கள் வந்துசேரும். சுப செலவுகள் உண்டாகும். தொழில் ரீதியாக வந்த மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். இன்று எப்பொழுதும் எதைப் பற்றியாவது சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதியும் சுகமும் அதிகமாகும். பணவரவு திருப்திகரமாகவே இருக்கும். பல வகையிலும் பிறர் உதவி கிடைக்கப் பெறுவீர்கள்.
புத்தி சாதுரியம் அதிகரிக்கும். யாருக்கும் வாக்குறுதிகள் கொடுப்பதை மட்டும் தவிர்ப்பது நல்லது. இன்று தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடந்தாலும் எதிர்பார்த்த லாபம் கொஞ்சம் குறையலாம். வியாபாரம் தொடர்பான பண பரிவர்த்தனையில் கவனம் இருக்கட்டும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மட்டும் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பை ஏற்படுத்தி கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்