கன்னி ராசி அன்பர்களே…!! இன்று ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாளாக இருக்கும். அக்கம் பக்கத்து வீட்டாருடன் பகை ஏற்படாமல் அனுசரித்து செல்வது நல்லது. வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று குடும்பத்தில் கலகலப்பு இருக்கும். கூடவே மனதில் ஒருவித கவலை இருந்து கொண்டே இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் எதையும் பேசி தீர ஆலோசித்து செய்வது நன்மையை கொடுக்கும். பிள்ளைகள் அன்பு செலுத்துவார்கள் ஆனால் அவர்களுக்காக நீங்கள் செலவு செய்ய நேரிடும்.
இன்று மனம் ஓரளவு அமைதியாகவே இருக்கும். கூடுமானவரை நீங்கள் வாக்குவாதங்களை மட்டும் தவிர்த்துவிடுங்கள் அது போதும். அதுமட்டுமில்லாமல் வெளியூர் பயணம் செல்வதாக இருந்தால் பொருள்கள் மீது கொஞ்சம் கவனமாக இருங்கள். அதுபோலவே சரியான பொருள்களை எடுத்துக் கொண்டோமா என கவனித்து செல்லுங்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும், இருந்தாலும் எப்போதும் சொல்வது போலவே கடுமையாக உழைத்து பாடங்களை படிப்பது பெரிதல்ல, படித்த பாடத்தை ஒருமுறைக்கு இருமுறை எழுதி பார்ப்பதுதான் நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்மங்கள் அனைத்தும் நீங்கி, செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு