கன்னி ராசி அன்பர்களே…!! இன்று எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறி செல்வீர்கள். வீடு வாகன பராமரிப்பு செலவினங்கள் அதிகமாகும். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலமாக லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். எதிர்பாராத உதவிகள் கிட்டும். இன்று மன அமைதி இருக்கும். எதிலும் நல்ல பலன்கிடைக்கும். திட்டமிட்டு செயலாற்றுவதிலும், உறுதியான முடிவுகளை எடுப்பதிலும், உங்களுடைய காரியங்கள் அனைத்துமே நல்லபடியாகவே இன்று நடக்கும்.
உங்களுடைய வாக்கு வன்மையால் சில காரியங்களை சிறப்பாக செய்து முடித்து பாராட்டுகளையும் பெறுவீர்கள். இன்று எதிர்பாராத திடீர் செலவுகள் மட்டும் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். அடுத்தவர் கூறுவதை தவறாக புரிந்து கொண்டு பின்னர் வருத்தப்படும் சூழ்நிலை ஏற்படலாம். அந்த விஷயத்தில் ரொம்ப கவனமாக செயல்படுங்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். சக மாணவர்களின் ஒத்துழைப்பைபு இன்று கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு