கன்னி ராசி அன்பர்களே..!! இன்று கோபத்தை குறைத்துக் கொண்டு தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி ஏற்படும். அனைத்து விஷயங்களிலுமே ரொம்ப கவனமாக செயல்பட வேண்டும். இன்று எதிர்பாராத செலவுகள் இருக்கும். ஆனால் வரவும் இருக்கும். வரவு இருந்தாலும் செலவு செய்யும் பொழுது கவனமாக செய்யுங்கள். தேவையில்லாத பொருட்களை வாங்கிக் குவிக்காதீர்கள். அரசியல் துறையினர் தேவையற்ற பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது. மற்றவர்களிடமும் எந்தவிதமான வாக்குறுதிகளையும் பெற்றுக் கொடுக் காதீர்கள். அதுமட்டுமில்லாமல் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். அதுபோலவே பணத்தை கடனாக வாங்கிக் கொடுக்காதீர்கள். அதாவது நீங்கள் பொறுப்பேற்று பணத்தை கடனாக வாங்கிக் கொடுக்காதீர்கள். இன்று ஓரளவு எல்லா வகையிலும் உங்களுக்கு சின்னதாக நன்மை நடக்கும்.
மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடும் அதை பார்த்துக் கொள்ளுங்கள். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரிடும். இன்று பால்ய நண்பர்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பு இருக்கு. அதாவது பள்ளிப் பருவத்தில் படித்த நண்பர்களை சந்திக்க கூடிய சூழல் இருக்கு. அதன் மூலம் உங்களுடைய மனம் மகிழும். கூடுமானவரை இன்று ஆலயம் சென்று வாருங்கள். அனைத்து விஷயங்களிலும் நல்லபடியாக நடக்கும். குடும்பத்தைப் பொறுத்தவரை நல்லபடியாகவே இருக்கும். பிள்ளைகளிடம் அன்பாக இருப்பீர்கள். மனைவியிடமும் அன்பாக இருப்பீர்கள். இன்று கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். இன்றைய நாள் சிறப்பாகவே இருக்கும். தாராள செலவு மட்டும் இருக்கும்.
அதை மட்டும் நீங்கள் கட்டுப்படுத்தி விட்டால் இன்றைய நாள் ரொம்ப நன்றான நாளாகவே இருக்கும். தொழிலில் வாடிக்கையாளரிடம் கொஞ்சம் பேசும்பொழுது ரொம்ப அன்பாக பேசுங்கள். அவர்களிடம் எந்தவித வாக்குவாதங்களும் செய்ய வேண்டாம். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். சக மாணவர்களின் அன்பும் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்