Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு… “பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்”… உடன்பிறப்புகள் உதவுவார்கள்..!!

கன்னி ராசி அன்பர்களே..!! இன்று பெற்றோரின் ஆதரவு கிடைக்கும் நாளாக இருக்கும். சொத்துக்களால் லாபம் கிட்டும். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுக்கும் முயற்சியில் பலன் கிடைக்கும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவார்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். இன்று மாணவர்கள் ஆர்வமுடன் பாடங்களை படிப்பார்கள். கூடுதல் மதிப்பெண்கள் எடுப்பார்கள்.

சக மாணவர்களின் உதவிகள் கிடைக்கும். கலைத் துறையைச் சார்ந்தவர்களுக்கு எடுக்கக்கூடிய முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த புகழ் பாராட்டுகளும் கிடைக்கும். இன்றையநாள் மனம் மகிழ்ச்சி கொள்ளும் நாளாகவே இருக்கும்.

செய்கின்ற முயற்சியையும் நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய  அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் ஊதா நிறம்

Categories

Tech |