கன்னிராசி அன்பர்களே..!! இன்று தொழில் வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். மகிழ்ச்சியோடு செயல்படுவீர்கள். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அழைப்புகள் வந்து சேரலாம். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டாகும். இன்று சீரான நிலையில் அனைத்துக் காரியமும் இருக்கும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால் பணப்புழக்கம் கடந்த காலத்தை விட அதிகமாகத்தான் இருக்கும்.
எதிர்பார்த்துக் கொண்டிருந்த புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம். அதற்கு நீங்கள் வருத்தப்பட வேண்டாம். அரசியல்வாதிகளுக்கு பாடுபட வேண்டி இருந்தாலும் பிற்பாதி உங்களுக்கு ரொம்ப சிறப்பாகவே இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இன்று எந்த பிரச்சினையும் இல்லை. நல்ல முன்னேற்றம் இருக்கும். கொடுக்கல் வாங்கல் கூட ஓரளவு சீராக தான் இருக்கும் அதே போல செலவை மட்டும் தயவு செய்து கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.
திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல திருமண வாய்ப்புகள் கிடைக்கும். தெய்வீக நம்பிக்கை கூடும். தெய்வீக சுற்றுலாக்கள் சென்று வருவதற்கான வாய்ப்புகளும் அமையும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தையும், சிவ பெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும். நீங்கள் நினைத்தது நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்