Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு… “பெயரும் புகழும் கூடும்”… எடுத்த காரியம் வெற்றி..!!

கன்னி ராசி அன்பர்களே…!! இன்று நண்பர்களின் ஆலோசனை உங்களை நல்வழியில் செயல்பட ஊக்கத்தைக் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் நிலுவைப் பணிகளை முடிப்பது அவசியம். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். உணவினை தரம் அறிந்து உண்ணுங்கள். இன்று எதிர்ப்புகள் விலகி செல்லும். குடும்பப் பிரச்சினைகள் தீரும் தன்னம்பிக்கை வளரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும் அதுமட்டுமில்லாமல் வாய்க்கு ருசியான உணவுகளை உண்டு மகிழுவீங்கள். வாக்கு வன்மை கூடும். சொன்ன சொல்லைக் காப்பாற்றி விடுவீர்கள்.

அறிவுத்திறன் அதிகரிக்கும். உங்களுக்குப் பெயரும் புகழும் கூடும். உங்களைப் பற்றி யாராவது அவதூறு பேசினால் கண்டு கொள்ளாமல் ஒதுங்கி விடுவது ரொம்ப நல்லது. விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் செல்லும். எடுத்த காரியத்தை சிறப்பாகச் செய்வீர்கள். அது மட்டுமில்லாமல் ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்புடன் அனைத்து விஷயங்களையும் சிறப்பாக மேற்கொள்வீர்கள்.

விளையாட்டுத்துறையில் கொஞ்சம் ஆர்வம் செல்லும் பார்த்துக் கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: 1 மற்றும் 3

அதிஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |