எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே..!! இன்று சகோதர வழியில் சகாயம் கிட்டும் நாளாக இருக்கும். தொழில் முன்னேற்ற பாதையை நோக்கி செல்லும். குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். நட்பால் நன்மை கிட்டும். இன்று அடுத்தவர்களின் பிரச்சினையில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தெய்வபக்தி அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படும். அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது மிகவும் நல்லது. மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது.
மேலிடத்தில் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். நினைத்தபடி பணம் வரவை இன்று பெறமுடியும். லாபத்தையும் பெறுவீர்கள். இன்றைய நாள் ஓரளவு மகிழ்ச்சியாகவே இருப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைய கூடும். ஆசிரியர்களின் சொல்படி மட்டும் நடந்துக் கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது அல்லது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையோ எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். ஆதாயமும் கிடைக்கும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்