கன்னி ராசி அன்பர்களே …! சுமாரான நல்லதாக இருக்கும். சோதனைகளையும் சாதனைகளாக மாற்றுவதற்கு கடுமையாக முயற்சி செய்வீர்கள். வியாபாரம் விருத்தியாக கடின உழைப்பு தேவைப்படும். எந்த ஒரு விஷயத்திலும் கவனம் என்பது கண்டிப்பாக வேண்டும். வேற்றுமொழி பேசுபவர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும். வீட்டிற்கு தேவையான எல்லா பொருட்களையும் வாங்க கூடும்.
வழக்கு விவகாரங்கள் போன்ற விஷயங்கள் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். சாதகமான பலனை இன்று நீங்கள் பெறுவீர்கள். புத்திரர்கள் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். இதனால் உடல் சோர்வு போன்றவை ஏற்படக்கூடும். வாடிக்கையாளர்களின் தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணங்கள் மேலோங்கும்.
இன்று காதலர்களுக்கு சிறப்பான நாளாக அமையும். அதே போல் கணவன் மனைவிக்கு இடையே பாசம் பெருகும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.