Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…சலுகைகள் கிடைக்கும்…ஆதாயம் பன்மடங்கு உயரும்…!

கன்னி ராசி அன்பர்களே …!    இன்று குடும்பத்தின்  உதவியும், ஒத்துழைப்பும் கிடைக்கும். தொழில் வியாபாரம் செழிக்க புதிய யுக்திகளை பயன்படுத்தி ஆதாயம் பன்மடங்கு உயரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பெண்கள் ஆடை ஆபரணங்கள் வாங்க கூடும். பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்களில் சாதகமான பலனை அடைவீர்கள். உங்களது பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது.

அதேபோல தேவையில்லாத பஞ்சாயத்துக்களில் நீங்கள் தலையிடவேண்டாம். அதிலும் கவனம் கொள்ளுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். பிரச்சினைகளை பேசித் தீர்த்து விடுவீர்கள். வசீகரமான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். புதியதாக காதலில் பயப்படக்கூடிய சூழலும் இருக்கும். காதலர்களுக்கும் இன்று எந்த விதத்திலும் பிரச்சனை இல்லை, எப்போதும் போலவே வாக்குவாதங்கள் மட்டும் செய்ய வேண்டாம்.

கணவன் மனைவிக்கு இடையே எதையும் பேசி தீர்த்துக்கொள்வது நல்லது. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீல  நிறம்.

Categories

Tech |