கன்னி ராசி அன்பர்களே…!! சிலர் உங்களிடம் பொறாமை கொள்ளக் கூடும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் உருவாகும். அதிகப் பால் உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். பணவரவை விட செலவு இன்றைக்கு அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும்போது மித வேகத்தில் செல்லுங்கள். இன்று செல்வாக்கு மேலோங்கும் நாளாக இருக்கும் செல்லும் இடங்களில் சிந்தனை வளர்த்தால் சிறப்படைவீர்கள். நீங்கள் பார்க்க நினைத்த நபர் உங்கள் இல்லம் தேடி வரக்கூடும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். இன்று தொழில் வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாடிக்கையாளர்களை அனுசரித்து நிதானமாக பேசுவது நன்மையை கொடுக்கும். இன்று கடனுக்காக பொருட்களை அனுப்பும் பொழுது கவனமாக அனுப்புங்கள். எச்சரிக்கையும் இருக்கட்டும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாகவே உழைக்க வேண்டியதாக இருக்கும். இன்று குடும்பத்தில் ஓரளவு மகிழ்ச்சி இருக்கும். இன்று பணவரவு ஓரளவு இருக்கும். இந்த நாள் நீங்கள் வெற்றி பெறும் நாளாகவே இருக்கும். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது பச்சை நிற கைக்குட்டை எடுத்துச் செல்வது சிறப்பு. இந்த பச்சை நிற கைக்குட்டை உங்களுக்கு செல்வத்தைக் கொடுக்கும். இது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதே போல நீங்கள் இன்று காலையில் எழுந்ததும் சிவ பெருமானை மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்டமான எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்டமான நிறம் : பச்சை மற்றும் மஞ்சள் நிறம்