கன்னி ராசி அன்பர்களே …! இன்று தங்களுடைய பொருட்களை நீங்கள் கவனமாக பாதுகாக்க வேண்டும். பயணங்களின்போது எச்சரிக்கையாகச் செல்லவேண்டும். வியாபாரிகளுக்கு தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பது சிரமம் இருக்கும். கடுமையான உழைப்பு இருக்கும். கணவர் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை வரலாம். உறவினர்கள் அனுசரித்துச் இல்லாமல் இருப்பதும் நல்லது. பிள்ளைகளிடம் பண்பாக நடந்து கொள்வது ரொம்ப நல்லது.
எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாகத்தான் உழைக்க வேண்டி இருக்கும். சக ஊழியர்களிடமும் அனுசரித்து செல்லுங்கள். கவனத்தை சிதறவிடாமல் உழைப்பது அவசியம். நிதி மேலாண்மையில் கண்டிப்பாக கவனம் கொள்ளுங்கள். மற்றவர் பார்வையில் படும்படி பணம் ஏதும் என்ன வேண்டாம். உடல் ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். சரியான உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். உஷ்ணம் சம்பந்தமான பிரச்சினைகள் எழக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள்.
காதலர்கள் இன்று கண்டிப்பாக பேச்சில் நிதானம் வேண்டும். வாக்கு வாதங்கள் ஏதும் செய்ய வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம்சிவப்பு உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்தும் முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்.