Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு… தன்னம்பிக்கை அதிகரிக்கும்…நண்பர்களில் உதவி கிடைக்கும் …

 

விருச்சிகம் ராசி அன்பர்களே..!   இன்று உங்களின் பலம், பலவீனத்தை நீங்கள் உணரக்கூடும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். ஆடை ஆபரணங்கள் சேரக் கூடிய வாய்ப்புகள் உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வேறு மதத்தவர் உங்களுக்கு அறிமுகம் ஆவார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். சக ஊழியர்கள் மதிப்பு கூடும்.

தன்னம்பிக்கை துளிர்விடும் நாளாக இன்றைய நாள் இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை நீங்கள் சந்திப்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் வரக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். பிள்ளைகளின் செயல்பாடுகள் இன்பத்தை கொடுத்தாலும் அவர்கள் பற்றிய கவலை இருந்துக்கொண்டே இருக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க வேண்டும்.

இன்று காதலில் பயப்படக்கூடிய சூழலும் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அ ணிந்து கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும். வெள்ளை எப்போதுமே உங்களுக்கு அதிஷ்டத்தை  கொடுக்கும். அதுபோலவே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள்.

Categories

Tech |