விருச்சிக ராசி அன்பர்களே…! நிதானமாகப் பேசுங்கள். திடீர் செலவு கொஞ்சம் ஏற்படும். இன்று மற்றவர்கள் பாராட்டுகின்ற நாளாக இருக்கும். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்து இணைவார்கள். மருத்துவ செலவுகள் குறைந்து மன நிம்மதியைக் கொடுக்கும். முன்னோர்கள் சொத்துக்களில் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகிச்செல்லும். வீண் செலவுகள் உண்டாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். குடும்பத்தில் இருப்பவர்களால் டென்ஷனை உண்டாக்கும்.
கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் கண்டிப்பாக வேண்டும். தாய் தந்தையின் உடல்நிலையில் எச்சரிக்கை வேண்டும். நிதானத்தை எப்போதுமே கைவிட்டு விடாதீர்கள். மற்றவரிடம் உரையாடும் போது கூடுதலாக எதையும் பேச வேண்டாம். உங்களுடைய ரகசியங்களை கண்டிப்பாக பாதுகாக்க வேண்டும்.
இன்று உடல் ஆரோக்கிய பொருத்தவரை ஓரளவு சீராக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5
அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம்மஞ்சள் நிறம்.