விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாளாக இருக்கும். வழக்குகள் சாதகமாகும் நலன் எடுத்த முயற்சிகள் வள்ளல்களின் ஒத்துழைப்பு உண்டாகும். பூர்வீக சொத்துப் பிரச்சினை சாதகமாக நடந்து முடியும். இன்று எல்லாவற்றிலும் லாபம் வரும் நோய் நீங்கி உடல் ஆரோக்கியமும் சீராகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் நல்ல மதிப்பு கூடும்.
கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை தேடி வரக்கூடும். பிரிந்த காதலர்கள் மீண்டும் இணைவார்கள். சகோதரத் தன்மை அதிகரிக்கும். அவர்களுக்கு உதவி செய்வீர்கள். குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாகவே காணப்படும். தயவுசெய்து மற்றவருக்காக பணப்பிரச்சினை மட்டும் ஏற்றுக் கொள்ள வேண்டாம்.
கூடுமானவரை ஜாமீன் கையெழுத்து வாக்குறுதிகளையும் ஏதும் கொடுக்க வேண்டாம். முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போல இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.