விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று முன்யோசனையுடன் செயல்படுவது மூலம் முன்னேற்றம் கிடைக்கும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவார்கள் என்பது சந்தேகம் தான் அவர்களிடம் தயவுசெய்து எந்தவித பாகுபாடும் வைத்துக் கொள்ளாதீர்கள். பொருளாதார முன்னேற்றம் பணவரவு திருப்தி போன்றவை இருக்கும். காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் ரொம்ப நல்லபடியாகவே இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நிலையும் மாறும், வேகம் பிடிக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் யோசனையைக் கேட்டு நடப்பது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். இருந்தாலும் தந்தையிடம் உரையாடும் பொழுது கொஞ்சம் கவனமாகவே உரையாடுங்கள். பழைய சொத்துக்களை பற்றிய பேச்சு வார்த்தை இப்போதைக்கு ஏதும் வேண்டாம். தன வரவு திருப்திகரமாக இருந்தாலும் செலவைக் கட்டுப்படுத்த வேண்டும். அனைத்து விஷயங்களும் முன்னேற்றகரமாக இருக்கும். கூடுமானவரை வாகனத்தில் செல்லும் போது பொருமையாக தான் செல்ல வேண்டி இருக்கும்.
அதே போல புதிதாக வாகனங்கள் வாங்கலாம் என்ற சிந்தனை மேலோங்கும். காதலர்கள் கண்டிப்பாக பொறுமை காக்க வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 3
அதிஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.