விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். சிந்தனை திறன் பெருகும் நாளாக இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டியிருக்கும்.
பணவரவு எதிர்பார்த்தபடி வரும். நண்பர்களின் உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். ஆதாயத்தை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். தயவுசெய்து யாரையும் குறை மட்டும் சொல்ல வேண்டாம். கூடுமானவரை வாகனத்தில் செல்லும் போது கொஞ்சம் கவனமாக செல்லுங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள்.
பணம் நான் பெற்றுத் தருகிறேன் என்று எந்த வாக்குகளையும் கொடுக்காதீர்கள். இன்று கூடுமானவரை பொறுமையாகவும் நிதானமாகவும் செல்வதால் அனைத்து விஷயங்களும் உங்களுக்கு வசியமாகும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிஷ்ட எண்கள்: 3 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்.