Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு…எண்ணம் மேலோங்கும்…நிதானம் தேவை…!

விருச்சிக ராசி அன்பர்களே…!        பொதுக் காரியங்களில் புகழ் சேர்க்கும் நாளாக இருக்கும். சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். வியாபார விரோதம் விலகிச்செல்லும். தொழில் ரீதியாக புதிய பங்குதாரர்கள் வந்து இணைவார்கள். கணவன் மனைவி இருவரும் எந்த ஒரு முடிவையும் நிதானமாக யோசித்து எடுங்கள். அவசரத்தை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

சகோதரர் வழியில் உதவியை எதிர்பார்க்கலாம். ஓரளவு சரியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். இன்று உறவினர் வருகை இருக்கும், அதனால் சிறிய செலவுகள் ஏற்படும். கூடுமானவரை எப்போதுமே நீங்கள் செலவை கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். காதலர்களுக்கு இன்று இனிமையான நாளாக இருந்தாலும் பொறுமை காக்க வேண்டும்.

இன்று கண்டிப்பாக நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். புதிதாக கடன்கள் மட்டும் வாங்க வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் எப்பொழுதுமே உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |