Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு…நம்பிக்கை கூடும்…அலட்சியம் வேண்டாம் …!

விருச்சிக ராசி அன்பர்களே…!      இன்று எடுத்த காரியத்தில் வெற்றி அடைய நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். உபரி வருமானம் கிடைக்கும். வீட்டுத் தேவைகளை நிறைவேற்றுதல் உடல்நல ஆரோக்கியம் பலம் பெறும் நிகழ்ச்சிகள் ஏற்படலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக்கொள்வது நல்லது.

ஆயுதம் நெருப்பு இவற்றை கையாளும் பொழுது கவனம் கண்டிப்பாக வேண்டும். எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. இன்று வீண் வாக்குவாதங்களை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். எந்த ஒரு காரியத்திலும் தயவுசெய்து அலட்சியம் காட்டவேண்டாம். பொறுமையாகவும் நிதானமாகவும் செயல்படுங்கள். முடிந்தால் குலதெய்வத்தை மனதில் நினைத்துக்கொண்டு ஈடுபடுவது நல்லது.

காதலர்கள் கண்டிப்பாக இன்று பொறுமை காக்க வேண்டும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். கூடுமானவரை பேசாமல் இருப்பது ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு உங்களுக்கு அதிஷ்டத்தையே  கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் இளம் மஞ்சள் நிறம்.

Categories

Tech |