Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு… பாராட்டுகள் கிடைக்கும்…போட்டிகள் உண்டு …!

விருச்சிக ராசி அன்பர்களே…!     குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்று நடப்பீர்கள். திட்டமிட்ட பணிகள் கூடுதல் கால அவகாசத்தில் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகள் குறுக்கிடும். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றங்கள் செய்வீர்கள். பிள்ளைகளால் உதவிகள் உண்டாகும். இன்று சொந்த தொழில் செய்வோர் சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். கலைத்துறையினருக்கு முயற்சியின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

ஆனால் பொருளாதார ரீதியாக சில பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். வாகனத்தில் செல்லும் பொழுது ரொம்ப கவனமாக செல்ல வேண்டும். இன்று சமூக சிந்தனையுடன் நீங்கள் காரியத்தைச் செய்வீ ர்கள். அதனால் உங்களுக்கு புகழும், பாராட்டுகளும் கிடைக்கும். மற்றவருக்கு உதவி செய்வதை வாடிக்கையாக கொண்டு இருப்பீர்கள். இன்று எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசனை செய்யுங்கள். யோசித்த பின்னர் காரியங்களில் ஈடுபடுவது நல்லது.

மிகப் பெரிய காரியமாக இருந்தால் பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு செய்யுங்கள். புதிய முதலீடுகளை தள்ளிப் போடுவது ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம்பச்சை நிறம் உங்களுக்குஅதிஷ்டத்தையே கொடுக்கும். இன்று சூரியபகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் உங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: இளம்பச்சை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |