விருச்சிக ராசி அன்பர்களே…! சுபசெலவுகள் ஏற்படும் நாளாக இருக்கும். சுற்றி இருப்பவர்களால் சில தொல்லைகள் வந்து சேரும். அரசியல் ஈடுபாடு அனுகூலத்தை கொடுக்கும். தொழில் மாற்றச் சிந்தனை மேலோங்கும். ஆலய வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உள்ள பிரச்சனைகளை நிதானமான அணுகுமுறை உடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.
தொழில் துறையில் உள்ளவர்களுக்கு அனைத்து விஷயங்களும் நன்றாக இருக்கும். வங்கி மூலம் நடைபெறக்கூடிய பண பரிமாற்ற முறையில் தங்குதடையின்றி அனைத்து விஷயங்களும் சிறப்பாக இருக்கும். பாக்கிகள் வசூலாகி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நீங்கள் இன்று புதிதாக கடன்கள் மற்றும் ஏதும் வாங்க வேண்டாம். உடல் ஆரோக்கியம் சீராக இருந்தாலும் வயிற்று உப்புசம் போன்ற பிரச்சினை இருக்கக்கூடும்.
அதாவது நீங்கள் சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள், சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5
அதிஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.