Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு…பாசம் அதிகரிக்கும்… மனமகிழ்ச்சி கூடும்…!

விருச்சிக ராசி அன்பர்களே…!    இன்று காரியங்கள் அனைத்தும் சிறப்பை கொடுப்பதாகவே அமையும். மனைவி மூலம் முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும். குழந்தைகள் மேல் பாசம் அதிகரிக்கும். அரசு ஆதரவால்  தொழிலில் வளர்ச்சி மிகுந்து காணப்படும். உற்சாக மிகுதியால் உள்ளம் மகிழும். மறைமுகமாக உங்களை குறை சொல்லியவர்கள் தங்கள் தவறை உணருவார்கள். காரியத்தால் மனமகிழ்ச்சி ஏற்படும்.

குடும்பத்தில் திருப்தியான சூழ்நிலையை காணப்படும். வாகனங்களை பயன்படுத்தும் பொழுது ரொம்ப கவனமாக பயன்படுத்துங்கள். நிதானம் இருந்தால் மட்டுமே இன்றைய நாள் மிகவும் சிறப்பாக இருக்கும். கோபத்தை கூடுமான அளவு கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். ஆதரவற்றவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவீர்கள். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை ஓரளவு சீராக தான் இருக்கும்.

குடும்பத்திலும் மகிழ்ச்சியும் கலந்த அன்பு காணப்படும். யாரைப் பற்றியும் நீங்கள் குறை சொல்லாமல் இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே  கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |