விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று அன்னையின் உடல் நிலையில் சிறப்பு கவனம் கண்டிப்பாக வேண்டும். செயல்பாடுகளில் வரக்கூடிய தடை தாமதங்களை கண்டு துவண்டுவிடாமல் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் இழுபறியான நிலை இருக்கும். சாதாரணமாக பேசினாலும் மற்றவர்கள் அதில் குறைகாண கூடும். வாகனங்களில் செல்லும்போது ஆயுதங்களை கையாளும் பொழுது கவனம் அவசியம்.
குடும்பத்தில் பிரச்சினை கொஞ்சம் தலை தூக்கலாம். மிகவும் கவனமாகக் கையாண்டால் அது சரியாக கணவர் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை கொஞ்சம் ஏற்படலாம். பிள்ளைகள் உங்களுடைய ஆலோசனையை கேட்காமல் தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பார்கள். இதனால் உங்களுக்கு கோபம் கொஞ்சம் தலை தூக்கும் என்று அவரிடம் அன்பாகவே நடப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
கூடுமானவரை இன்று செலவை கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். காதலர்கள் கோபப்படாமல் பேசுவது ரொம்ப நல்லது. அதேபோல் இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது அடர் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப ரொம்ப நல்லது. அடர் நீலம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிஷ்ட எண்கள்: 3 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீல மற்றும் சிவப்பு நிறம்.