விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று அன்னிய தேசத்திலிருந்து பல தகவல்கள் நல்லபடியாக வந்து சேரும். திறமை மிக்கவர்கள் ஒத்துழைப்பும் கிடைக்கும். பொன் பொருள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும், இலையை சகோதரர்களால் நல்ல முன்னேற்றம் உங்களுக்கு இருக்கும். பணத்தேவை ஏற்பட்டாலும் அதை திறமையாக சமாளித்து விடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை சமாளித்து முன்னேறி செல்வீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணிகளில் தாமதம் காட்டாமல் செயல்படுவது நல்லது. அதேபோல எந்த ஒரு காரியத்தையும் அலட்சியம் இல்லாமல் செய்யுங்கள். பொறுமையாக செய்யுங்கள் நிதானமாகவே செய்யுங்கள். அதேபோல் உங்களுடைய வசீகரமான பேச்சால் சில முன்னேற்றமான விஷயங்களும் நடக்கும். புதிதாக காதல் வயப்பட கூடிய சூழலும் அமையும்.
அதுபோலவே காதலர்களுக்கும் இன்று நாள் இனிமையான நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கருநீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. கருநீலம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீலநிறம்.