Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு…உயர்பதவிகள் கிடைக்கக்கூடும்…பாராட்டுகளை பெறுவீர்கள்…!

விருச்சிக ராசி அன்பர்களே…!   இன்று முக்கியமான பணி நிறைவேற கொஞ்சம் காலதாமதம் பிடிக்கும். இதனால் சிறு வேலைகளை நினைவுபடுத்தி நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபார நடைமுறை சராசரி அளவில் இருக்கும். அடுத்தவர் பார்வையில் அதிக பணம் செலவழிக்க வேண்டாம். பணவரவு சீராக இருக்கும். மன தைரியம் கூடும். எப்படிப்பட்ட சூழ்நிலையும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள். ஆனால் மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது மட்டும் அவசியம்.

வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டுகளை பெறுவீர்கள். உயர்பதவிகளும் கிடைக்கக்கூடும்.இன்று உஷ்ணம் சம்பந்தமான சில பிரச்சினைகள் இருக்கும். அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். ஜீரண சக்தி குறையும். எந்தவித பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும்.

கூடுமானவரை ஜீரணத்திற்கு ஏற்றார்போல் உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள்.  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று குருபகவான் வழிபாட்டையும், சித்தர்கள் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |