விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று லட்சிய நோக்குடன் செயல்படுவீர்கள். நண்பர் மற்றும் உறவினர் அன்பு பாராட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் திருப்திகரமான முன்னேற்றம் இருக்கும். லாபம் நல்லபடியாக இருக்கும். பிள்ளைகளுக்குப்வேண்டிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். மன தைரியம் கூடும். எல்லா காரியங்களும் நல்ல படியாகத்தான் நடந்து முடியும். அனைத்து விஷயங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். எல்லா இடங்களிலும் மரியாதையும், கௌரவமும் கூடும்.
எல்லா தரப்பினரிடமும் இருந்தும் ஆதரவும் கிடைக்கும். நன்மை தீமைகளைப் பற்றி கவலைப்படாமல் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். ஆனால் நீங்கள் இன்று செய்ய வேண்டியதை எந்த ஒரு காரியத்தை செய்யும் பொழுதும் அலட்சியம் காட்டாமல் செய்யுங்கள். உத்தியோகத்தில் ஓரளவு முன்னேற்றம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ளுங்கள். கண்டிப்பாக நல்ல உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
காதலர்களுக்கு எந்த விதத்திலும் பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம்பச்சை உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் பச்சை நிறம்.