விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று கணவன் மனைவிக்கு இடையே எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும். இதனால் உங்களுடைய மனம் மகிழ்வாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் அக்கறை அதிகமாக காணப்படும். மற்றவர்கள் குறை கூறாத அளவுக்கு நடந்து கொள்வீர்கள். எவ்வித துன்பம் வந்தாலும் துவண்டு விடாமல் சிரிக்கக் கற்றுக் கொள்வீர்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் பேச்சில் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள்.
புதிய வாகனம் வாங்கும் எண்ணம் இருப்பின் அதை சற்று தள்ளி வையுங்கள். மனதில் மகிழ்ச்சியான எண்ணங்கள் இருக்கும். திடீரென்று அவசர முடிவுகளை மட்டும் தயவு செய்து எடுக்க வேண்டாம். கோபம் கட்டுப்படுத்துவதன் மூலம் வெற்றி மேல் வெற்றி இருக்கும். கோபத்தை கூடுமானவரை பேச்சில் நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். நட்பு உறவினர்களிடம் சுமுகமான நிலை நீடிக்கும். தேவை இல்லாத விஷ்யத்தை நினைத்துக்கொண்டு மனக்கவலை மட்டும் அடைந்து கொண்டே இருப்பீர்கள்.
புதியதாக வாய்ப்புகள் வந்து சேரும். மனை,வீடு வாங்க எடுக்கும் முயற்சிகள் சற்று தாமதமாகத்தான் கிடைக்கும் . காதலர்களுக்கு எந்த விதத்திலும் இன்று முன்னேற்றம் இருக்கும். ஆனால் பேச்சில் மட்டும் கோபம் கொள்ள வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாடு நன்மையை கொடுப்பதாகவே இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்.