விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று உங்களுடைய செயல்களில் சில தடுமாற்றங்கள் ஏற்படலாம் பணிகளில் பாதுகாப்பை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தொழிலில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற கால அவகாசம் தேவைப்படும். முக்கிய செலவுகளுக்கு கண்டிப்பாக கடன் பெறலாம். மனைவி உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். கோபம் படபடப்பு கொஞ்சம் இருக்கும். மற்றவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். திடீர் செலவு மற்றும் அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பவர்களுக்கு திடீர் பிரச்சனைகள் ஏற்பட்டு மீண்டும் கல்வி பற்றிய பயம் இருந்து கொண்டே இருக்கும். வாகனங்கள் மூலம் செலவு அதிகரிக்கும். இப்ப இருக்கக்கூடிய வாகனத்தை மாற்றி விடலாமா என்ற சிந்தனையும் எ ழும்.பழைய சொத்துக்களை ஓரளவு தீர்வு கிடைக்கலாம். கூடுமானவரை எப்போதும் சேமிக்கக்கூடிய எண்ணத்தை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள்.
காதலர்கள் எப்போதும் வாக்குவாதத்தை மட்டும் தவிர்க்கவும். தேவையில்லாத பிரச்சனை பற்றிப் பேசிக்கொண்டிருப்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 6
அதிஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெள்ளை நிறம்.