Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு…சிக்கல்கள் விலகும்…பாராட்டுகளை பெறுவீர்கள்…!

விருச்சிக ராசி அன்பர்களே…!    சிலருக்கு வேலையின் காரணமாக இன்று பயணம் மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் பணியை கண்டு பாராட்டுவார்கள். குடும்பத்தில் சிக்கல்கள் வந்து விலகும். அதனால் செலவுகள் கொஞ்சம் ஏற்படலாம். இன்று எதிர் பார்த்தபடியே பழைய பாக்கிகள் வசூலாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்கள் செயல்பாடுகள் உங்களுக்கு கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். பிள்ளைகள் பற்றிய கவலை நீக்கும். உறவினர் மூலம் எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். ஓரளவு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். காதலர்கள் இன்று வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

இன்று எந்தவித பிரச்சினையும் இல்லாமல் சுமூகமாகவே இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர்பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெளிர்பச்சை  உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிஷ்ட எண்கள்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: வெளிர்பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |