Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு…அலைச்சல் உண்டாகும்…புதிய நட்பு அறிமுகமாகும்…!

விருச்சிக ராசி அன்பர்களே…!   தனவரவு தாராளமாக வந்து சேரும். தன்னம்பிக்கையோடு பணியாற்றி தடைகளை அகற்றுவீர்கள். புதியவர்களின் நட்பு கிட்டும். பொழுதுபோக்கு விஷயங்களில் நாட்டம் செல்லும். விவாகப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். நண்பர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

உச்சத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வீண் அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் இருப்பவருடன் அவ்வப்போது சில வாக்குவாதங்கள் வந்து செல்லும். உடல் ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். காதலர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கருநீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. கருநீலம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: 3 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம்: கரு நீலம் மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |