Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு…ஆர்வம் அதிகரிக்கும்….மரியாதை உயரும்….!

விருச்சிக ராசி அன்பர்களே…!  இன்று உத்தியோகத்தில் உயர்வு கிட்டும் நாளாக இருக்கும். துவண்டு போன வாழ்க்கையை தூக்கி நிறுத்தும் நாளாக இன்று  இருக்கும். சேமிப்புகளை உயர்த்துவதில் அதிகம் ஆர்வம் காட்டுவீர்கள். பொதுவாழ்வில் மதிப்பும் மரியாதையும் உயரும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். இன்று உடன்பிறந்தவர் உடன் மனவருத்தம் கொஞ்சம் ஏற்படும் விதத்தில் இருக்கும். ஏதாவது சின்ன சின்ன சம்பவங்கள் நடக்கும். உறவினர்கள் நண்பர்கள் உங்களை சரிவரப் புரிந்துகொள்ளாமல் உங்களை விட்டுப் பிரிந்து செல்லக் கூடும்.

திடீர் மனக்கவலை ஏற்படும். குறிக்கோள் இல்லாமல் அலைய வேண்டி இருக்கலாம். பணவரவு ஓரளவு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு ஏற்படுத்திக் கொள்வீர்கள். பஞ்சாயத்துக்களில் தலையிடும் போது கொஞ்சம் கவனமாக ஆலோசனை செய்யுங்கள். தயவுசெய்து தேவையில்லாத செயல்களில் மட்டும் கலந்து கொள்ள வேண்டாம். இன்று நிதி மேலாண்மையில், உடல் ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். சரியான உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

நட்பால் ஆதாயம் ஏற்றுக்கொள்வீர்கள். அது போலவே காதலர்கள் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்து தான் ஆகவேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ஓரளவு நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 6

அதிஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |