விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று எல்லா வளமும் பெருகும். தொழில் வளர்ச்சிக்காக வரும் வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள். பயணிகள் செல்வதாக இருந்தால் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். பெண்கள் தனக்கென தனி இடம் இன்று அமையும் வசீகரமான தோற்றம் அனைவரையும் கவர்வீர்கள். கணவர் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்து முடிக்க அலைய வேண்டியிருக்கும்.
உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுக்கட்டைகள் விலகிச் சென்று அங்கே எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரவு சீராக இருக்கும். எதிர்பாராத காரியத்தடைகள் இருக்கும் வாகனங்களில் செல்லும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நட்புடன் பழகும் போதும் ரொம்ப கவனமாக பேச வேண்டும். அவர்களே தயவு செய்து குறை சொல்ல வேண்டாம்.
அதேபோல கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாம இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்து உங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.