விருச்சிக ராசி அன்பர்களே…! உங்களுடைய எண்ணம் செயலில் புதிய உத்வேகம் பிறக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். சற்று எச்சரிக்கையுடன் எதையும் செய்வது நன்மையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் முழு கவனத்துடன் ஈடுபடுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகவே இருக்கும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்.
அடுத்தவர்களுக்காக விட்டுக் கொடுத்து செல்வதில் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். மனதில் ஏதேனும் கவலை இருந்துக்கொண்டே இருக்கும். தயவுசெய்து யாரை பற்றியும் கவலை படாதீர்கள். காரியத்தை மட்டும் கவனமாக செய்யுங்கள். மாலை நேரங்களில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். உடலை வலுப்படுத்தும் மனதை திடப்படுத்தி நிதானமாக இருந்தால் அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சிறப்பாக நடக்கும்.
காதலர்களுக்கு இன்று மிகவும் இனிமையான நாளாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள்: 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.