Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு… மனக்குழப்பம் அதிகரிக்கும்… வெற்றி உண்டாகும்…!

 

விருச்சிகம் ராசி அன்பர்களே..!    இன்று முன்னேற்றம் கூடும் நாள் ஆக இருக்கும். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். அன்னிய தேசத்திலிருந்து அனுப்பிய செய்தி ஒன்று வந்து சேரலாம். பயணங்கள் மேற்கொள்வதாக இருந்தால் கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும் பார்த்து செல்லுங்கள். மிக முக்கியமாக உடைகள் மீது கவனமாக இருங்கள்.தயவுசெய்து இன்று எதிர்பார்ப்பை மட்டும் குறைத்துக் கொள்ளுங்கள்.

தேவையான நிதி உதவி கிடைக்கப் பெற்றாலும் சரியான முறையில் பயன்படுத்துவது ரொம்ப நல்லது. யாரிடமும் தேவைக்காக இன்று கடன்கள் வாங்க வேண்டாம் பார்த்துக்கொள்ளுங்கள். மிக முக்கியமாக வாக்குறுதிகள் ஏதும் கொடுக்க வேண்டாம். கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து சென்றாலும் பிரச்சினை இல்லை. சுமூகமாகவே எல்லாம் செல்லும் பிள்ளைகளிடமும் அன்பாக நடந்து கொள்ளுங்கள். அக்கம் பக்கத்தினரிடம் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள்.இன்று எதைப்பற்றியும் சிந்தித்துக் கொண்டிருக்காமல் காரியத்தில் கவனம் செலுத்துங்கள்.

மனம் குழப்பம் அடைந்தாலும் ஓரளவு முன்னேற்றமான சூழ்நிலை தான் காணப்படும். இன்று இறை வழிபாட்டுடன் காரியங்களைச் செய்யுங்கள் மிக சிறப்பாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று ரொம்ப சந்தோஷமாக இருக்கலாம்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை.

Categories

Tech |