விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று மங்கல நிகழ்வுகளில் இனிமை காண்பீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய வளர்ச்சி ஏற்படும். லாபம் படிப்படியாக உயரும். நண்பர்களால் உதவிகள் பெறுவீர்கள். பெண்கள் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வார்கள். பிள்ளைகளை நல்ல செயல் பெருமை சேர்க்கும். இன்று அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையை காண்பீர்கள்.
அதே நேரம் தான் உண்டு தன் வேலை உண்டு என்கின்ற ரீதியில் பணியாற்றி அனைத்து பிரச்சனைகளிலும் இருந்து ஒதுங்கி இருப்பீர்கள். வியாபாரிகளுக்கு லாபம் பெருகும். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் லாபகரமாக நடக்கும். பெண்களுக்கு இன்றைய நாள் மிகவும் முன்னேற்றமான நாளாக இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு சிறப்பான சூழ்நிலைகள் ஏற்படும்.
புதிதாக காதலில் வயப்படக்கூடிய சூழல் உண்டாகும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம்பச்சை உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீலம் பச்சை நிறம்.