விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று அதிகாலையிலேயே அனுகூலமான தகவல் வந்து சேரும் நாளாக இருக்கும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வார்கள். வெளிநாட்டு தொடர்பு நலம் பயக்கும். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் இருக்கும். தேவையான பண உதவியும் கிடைக்க கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.
கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். வேலை தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது ரொம்ப ரொம்ப நல்லது. இன்று எதையும் நிதானமாக செய்யுங்கள். படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறிச் செல்வீர்கள். இன்று உற்றார் உறவினரிடம் கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள். பேச்சில் நிதானம் இருந்தால் எந்த ஒரு விஷயத்தையும் சாதித்துக் கொள்ளலாம்.
காதலர்கள் இன்று கண்டிப்பாக பொறுமை காக்க வேண்டும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்து தான் ஆக வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 6
அதிஷ்ட நிறம்: நீல மற்றும் மஞ்சள் நிறம்.