Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு…சிக்கல் உண்டாகலாம்…அன்பு கூடும் …!

விருச்சிக ராசி அன்பர்களே…!    இன்று பேச்சில் சமயோசிதம் நிறைந்திருக்கும். நண்பர் உறவினர் அதிக அன்பு பாராட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி நிறைவேறும். உபரி வருமானம் கிடைக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்று செல்வமும்,செல்வாக்கும் மிக்க மனிதர்களின் நட்பும் கிடைக்கும். ரகசியங்களை தயவுசெய்து யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். ஏனெனில் அது உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய அளவில் இருக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களுக்கு டென்ஷன் உண்டாகும். சகோதர ஒற்றுமை பெறுவதில் கொஞ்சம் சிக்கல்கள் இருக்கும். கூடுமானவரை நீங்கள் பேச்சை குறைத்துக் கொண்டாலே போதுமானதாக இருக்கும். மற்றவரிடம் உரையாடும் பொழுது ரொம்ப கவனம் வேண்டும். புதிய நபரிடம் அளவாகவே பழகுங்கள். வெளியூர் பயணம் செய்வதாக இருந்தால் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். இன்று காதலர்கள் சூழ்நிலைக்கு ஏற்றார் போல் செயல்பட வேண்டும்.

அதேபோல கணவனும் மனைவியும் அதற்கு ஏற்றார் போல் நீங்கள் செயல்பட வேண்டும். மனைவியிடம் எந்த விஷயத்தையும் மறைக்காமல் பேசுவது நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்வதற்கு ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும். ஆரஞ்சு உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று அம்மன் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |