விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று உங்களுடைய திறமை பளிச்சிடும் நாளாக இருக்கும். சுய நம்பிக்கையால் வெற்றி உண்டாகும். அனைவராலும் மதிக்கப்படும் இனிய பேச்சுக்களால் பெண்கள் மூலம் லாபத்தை ஈட்டிக் கொள்வீர்கள். பணவரவு திருப்தி தரும் வகையில் இருக்கும். நண்பர்கள் உங்களுக்கு உதவி செய்ய முன் வருவார்கள். ஆடம்பர செலவுகள் ஏற்படும். கோபத்தை கட்டுப்படுத்துவது நன்மையை கொடுக்கும் வகையிலும் உங்களுக்கு நன்மை உண்டாகும்.
இழுபறியாக இருந்த சில வேலைகள் சாதகமாக நடந்து முடியும். மனதில் மகிழ்ச்சி இருக்கும். தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். தொழில் தொடர்பான விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். கடினமான வேலைகள் கூட சுலபமாக நடந்து முடியும். ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும். மன தைரியம் உண்டாகும். தொழில் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் நல்ல பலனை கொடுக்கும்.
முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய நாளாகவே இருக்கும். காதலர்களுக்கும் இனிமை காணும் நாளாகவே இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்துமே ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் பச்சை நிறம்.