Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! பண வரவு உண்டாகும்….! நினைத்த காரியம் நிறைவேறும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! நினைத்த காரியம் நிறைவேறும்.

சொந்த தேவைகளை நிறைவேற்றுவதில் அதிக ஆர்வம் இருக்கும். சுயமாகத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காத்திருக்கின்றது. தொழில் ரீதியாக சில முக்கிய முடிவுகள் எடுக்க முடியும். பணத்தேவைகள் கண்டிப்பாக பூர்த்தியாகும். எதிர்பார்த்த பணவரவு தானாக வந்துசேரும். மனோதைரியம் இன்று கூடும். எல்லா காரியங்களும் இன்று உங்களுக்கு சாதகமாகவே நடக்கும். இன்றைய நாள் நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் எதையும் செய்து முடிக்க கூடிய நாள். தலைநிமிர்ந்து நடக்க கூடிய அம்சம் இருக்கின்றது. நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த காரியங்கள் கூட நல்ல முடிவை கொடுக்கும். திட்டமிட்ட பணி நிறைவேற கொஞ்சம் காலதாமதம் எடுத்தாலும் கண்டிப்பாக நிறைவேறிவிடும்.

இன்று குடும்பத்தைப் பொறுத்தவரை கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை இல்லாத வாழ்க்கை அமைவதோடு மனசுக்குள் சந்தோஷம் இருக்கும். நீண்ட நாட்களாக பிரச்சனையில் இருப்பவர்கள் கூட இப்போது அதிலிருந்து விடுபட கூடிய கால கட்டமாக இருக்கின்றது. மனதுக்குப் பிடித்தவரை கரம் பிடிக்க கூடிய சூழல் உருவாகியுள்ளது. மாணவர்களுக்கு தைரியம் கூடும். கல்வியில் சில மாற்றங்கள் உண்டாகும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமானை வழிபட்டு எந்த ஒரு பணியையும் செய்து பாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டு விடும். இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென் மேற்கு. அதிர்ஷ்ட எண்-3 மற்றும் 9. அதிர்ஷ்ட நிறம் சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |