Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சீரமைத்து தரப்படுமா…? விரிசல் வந்துட்டு…. பொதுமக்களின் கோரிக்கை….!!

சேதமடைந்துள்ள கால்நடை மருத்துவமனையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் பெரும்பாலானோர் கால்நடை வளர்த்து வருகின்றனர். இந்த பகுதியில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சாத்தனூரில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்பட்டது. மேலும் இந்த மருத்துவமனையில் சாத்தனூர், பழையனூர், காக்கையாடி, நாகங்குடி, வடபாதிமங்கலம், புனவாசல், கிளியனூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் தாங்கள் வளர்த்து வரும் கால்நடைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டால் அதற்கு சிகிச்சை அளிப்பதற்கு அழைத்து வருகின்றனர்.

இந்நிலையில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கட்டப்பட்ட கால்நடை மருத்துவமனை சில இடங்களில் விரிசல் ஏற்பட்டு கட்டிடம் சேதமடைந்த நிலையில் இருக்கின்றது. எனவே மழைக்காலங்களில் அங்கு கால்நடைகளை கொண்டு சென்று நிறுத்தி வைப்பதற்கு போதுமான வசதிகள் இல்லாததால் மக்கள் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். எனவே சேதமடைந்துள்ள கால்நடை மருத்துவமனை கட்டிடத்தை சீர்செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மருத்துவமனை வளாகத்தில் நிழற்கூடங்களை அமைக்க வேண்டும் என்றும் பொது மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Categories

Tech |