ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஜாதகம் கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கண்ணன் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
இது தொடர்பாக அவரது மனைவி மகாலட்சுமி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து கண்ணன் எவ்வாறு உயிரிழந்தார், அவரை யாரேனும் அடித்துக் கொலை செய்தார்களா இல்லை வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.